மார்க்ககல்வி முற்றிலும் இலவசம்! இஸ்லாமிய மாணவிகளுக்கு வேண்டுகோள்!

Comments (0) ஆன்மிகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இஸ்லாமிய மாணாவிகளுக்கான மார்க்ககல்வியை முற்றிலும் இலவசமாக கற்றுத்தர முன்வந்துள்ளது செய்யது ஹலிமத்துல் நூரிய்யா அரபிபாடசாலை. திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த அரபி பாட சாலையில் மத்கப் மற்றும் ஆலிம்களுக்கான கல்வி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் –சிறுவர் என அனைவருக்கும் தனித்தனி பாடசாலைகள் உள்ளது. திருமணமான மகளிரும் இங்கு மார்க்க கல்வி கற்றுதர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மதரசாயே நிஸ்வான் பாடத்திட்டக்குட்பட்ட இங்கு பாதுகாப்பான முறையில் மகளிர் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மதரசாவை புத்தாநத்தத்தை சேர்ந்த கொரட்டை என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.எம்.ஜெயினுதீன் நடத்தி வருகிறார். இவர் சென்னை மன்னடியில் எஸ்.எம்.ஜே வணிக வளாகத்தை நிறுவி ,அதில் தொழுகைக்கான மசூதியையும் நிர்மாணித்து உள்ளார் .இஸ்லாமிய நெறிமுறைகளை மக்களுக்கு எடுத்து செல்லும் விதமாக புத்தாநத்தத்தில் இலவச அரபி பாடசாலை அமைத்துள்ளார்.இந்த பாடசாலையில் இணைந்து கல்வி பெற விரும்புவர்கள் கீழ்காணும் முகவரிக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.குறிப்பிட்ட அளவிலேயே மாணாக்கர்களை தேர்வு செய்ய இருப்பதால் மார்க்க கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் பெற்றோர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி

செய்யது ஹலிமத்துல் நூரிய்யா அரபி பாட சாலை

எண் 1178 கிழக்கு தெரு புத்தாநத்தம்

திருச்சி மாவட்டம்

தொலைபேசி  எண்கள் ; தொடர்புக்கு 9840328000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *