நெல்லையில், தாறுமாறாக ஓடிய கார், பள்ளிக்கூட சுவற்றில் மோதி விபத்து

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் வெயிலுமுத்து. நெல்லை கோர்ட்டில் வக்கீலாக உள்ள இவர், நேற்று நெல்லையில் இருந்து ராமையன்பட்டி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் அருகே வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக கார், வெயிலுமுத்துவின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.அப்போது அந்த வழியாக ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி மற்றும் நடந்து சென்றவர்கள் என 4 பேர் மீது மோதியது. இதைத்தொடர்ந்து அந்த கார், அங்குள்ள பள்ளிக்கூடத்தின் காம்பவுண்டு சுவர் மீது மோதி நின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி அப்துல் ஜப்பார், ஆயிஷா பானு, தச்சநல்லூரை சேர்ந்த முப்புடாதி, வடமாநிலத்தை சேர்ந்த கோராகேஷ் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் தாறுமாறாக ஓடியபோது ரோட்டில் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் கார் அங்குள்ள பள்ளிக்கூட காம்பவுண்டு சுவரில் மோதி நின்றது. இதில் வக்கீல் வெயிலுமுத்தும் காயம் அடைந்தார். அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *