கோவில்பட்டி; கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பட்டதாரி வாலிபர் !

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

எட்டயபுரம் ஆதி திராவிடர் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் லெனின்குமார் (வயது 29). இவர் எம்.காம். படித்து உள்ளார். தி.மு.க. பிரமுகரான இவர் எட்டயபுரத்தில் கணினி மையம் நடத்தி வருகிறார். இவர் மக்கள் பிரச்சினைகள் குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியதாகவும், இதனால் அவரை எட்டயபுரம் போலீசார் அவமானப்படுத்தியதாகவும் கூறி, நேற்று காலையில் லெனின்குமார் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் விரைந்து சென்று, லெனின்குமாரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர்.கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, அலுவலக பணிக்காக வெளியே சென்று இருந்தார். எனவே உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம், லெனின்குமார் கோரிக்கை மனு வழங்கினார்.தொடர்ந்து, உதவி கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக லெனின்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து அழைத்து சென்றனர். உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பட்டதாரி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *