மசூதியில் குண்டு வெடிப்பு: 305 பேர் பலி!

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள பிர் அல்-அபெட் நகரில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 305 ஆக அதிகரித்து உள்ளது. ‘எங்கள் முழு பலத்தைப் பயன்படுத்தி இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும்’ என அந்நாட்டு அதிபர் அப்துல் பட்டா அல்-சிசி உறுதியாகக் கூறியுள்ளார். சினாய் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய கிளர்ச்சி குழுவுடன் பல ஆண்டுகளாக எகிப்தின் பாதுகாப்புப் படையினர் சண்டையிட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் நடந்துள்ள மோசமான தாக்குதலுக்கு இக்குழுவினரே பின்னணியில் இருந்துள்ளனர். இக்குழுவினர் வழக்கமாக கிறிஸ்துவ தேவாலயங்களையும், பாதுகாப்பு படையினரையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவார்கள். ஆனால், தற்போது மசூதியில் நடத்தப்பட்டுள்ள மோசமான தாக்குதல் எகிப்து நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடும் நமது நடவடிக்கைகளை நிறுத்தும் முயற்சியாகவே இது நடந்துள்ளது” எனத் தாக்குதலுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேசிய அதிபர் அப்துல் பட்டா அல்-சிசி கூறினார். இந்தத் தாக்குதலை தொடர்ந்து நாட்டில் மூன்று நாள்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *