மீண்டும் சிங்கப்பூர் செல்லும் விஜயகாந்த்

Comments (0) Uncategorized

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மருத்துவப் பரிசோதனைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்னும் ஒரு வாரத்துக்குள் சிங்கப்பூர் செல்கிறார் என்று தேமுதிக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில மாதங்களாக உடல்நலம் தேறியுள்ளார். தேமுதிக சார்பில் நடைபெறும் நிகழ்வுகளிலும், பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக போராட்டங்களும் நடத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து தினமும் நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார்.இந்தச் சூழ்நிலையில் தேமுதிக சார்பில் நேற்று (நவம்பர் 25) வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மருத்துவப் பரிசோதனைக்காக ஒரு வாரத்துக்குள் செல்ல இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் உடல்நலக் குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், ஒரு வார சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *