சென்னையில் புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம்,புரசைவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறும்பொழுது, தெற்கு வங்க கடலை ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இன்று லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நகரில் அவ்வப்போது தரைக்காற்று வலுவாக வீசக்கூடும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயபுரம், மீனம்பாக்கம், ஆலந்தூர், அண்ணாநகர் மற்றும் கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோன்று அரும்பாக்கம், முகப்பேர், சவுகார்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் நாவலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *