அதிமுகவிலிருந்து பேராசிரியர் தீரன் நீக்கம்!

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அண்மையில் அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர் தீரன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் பாமக தலைவராக இருந்துவந்த பேராசிரியர் தீரன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா முன்யிந்நிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்துகொண்டு, கட்சியின் சார்பில் வாதங்களை முன்வைத்து வந்தார். தொடர்ந்து தினகரன் தனியாகச் செயல்பட ஆரம்பித்த பிறகு எடப்பாடி -பன்னீர் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் தீரன். கடந்த 2ஆம் தேதி வெளியிடப்பட்ட 12 பேர் கொண்ட அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தீரனும் இடம்பிடித்தார்.

இந்த நிலையில் நேற்று எடப்பாடி – பன்னீர் இருவரும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் பேராசிரியர் தீரன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பேராசிரியர் தீரன், “அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே செயல்பட்டதில்லை. என்னுடைய அறிவு, ஆற்றல், திறமை ஆகியவை அதிமுகவுக்குத் தேவையில்லை என்றால் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பிரச்னைகள் தீர, கட்சி தினகரனிடமும் ஆட்சி எடப்பாடி பழனிசாமியிடமும் இருக்க வேண்டும் என்று தீரன் பேசியதால்தான் இந்த நீக்க நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *