ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட்

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ செயற்கைகோள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சொந்தமான 30 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதில் 710 கிலோ எடைகொண்ட கார்ட்டோ சாட் -2 செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.
இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தியது. இது இஸ்ரோ அனுப்பும் 100-வது செயற்கைகோளாகும்.தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்றவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது இந்த கர்ட்டோ சாட் -2 செயற்கை கோள் ஆகும்.  வெளிநாட்டைச்சேர்ந்த 28 செயற்கை கோள்கள் உட்பட மொத்தம் 31 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. 28 செயற்கைகோள்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பின்லாந்து, கொரியா, பிரான்சு ஆகிய நாடுகளை சேர்ந்தவை ஆகும்.
2.21 மணி நேரத்தில் 505 கி.மீட்டர் உயரத்தில் புவி வட்ட பாதையில் கார்ட்டோ சாட் -2 செயற்கை கோள் நிலைநிறுத்தப்படும். கார்ட்டோ சாட் -2 செயற்கை கோளின் எடை 710 கிலோ ஆகும். இந்த செயற்கை கோள் இயற்கை வள ஆராய்ச்சிக்கு உதவும். மொத்தம் 1,323 கிலோ எடையுள்ள 31 செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் சென்றுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *