இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை நிறுத்த வேண்டும் எச். ராஜாவுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் எச்சரிக்கை

Comments (0) ஆன்மிகம், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டும் விதமாக பேசி வருவதை எச். ராஜா நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹாத் ஜமாஅத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நபிகளாரையும் அவர்தம் குடும்பத்தினரையும் சீண்டி பார்த்து இஸ்லாமியர்களை வம்புக்கு இழுக்கும் விதமாக பேசி வரும் எச்.ராஜாவை கண்டித்து சென்னையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட சென்னை மாவட்டதலைவர் ஐ.அன்சாரி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சையது இப்ராகிம் கண்டன உரையாற்றினார்.

அப்போது கவிஞர் வைரமுத்துவை கண்டிப்பதாக கூறிக்கொண்டு இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தையும் அவரது குடும்பத்தினரையும் இழிவாக பேசி இஸ்லாமியர்களின் உணர்வுகளை எச். ராஜா தூண்டியுள்ளார்.

தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதை விரும்பாத எச்.ராஜா நச்சுகருத்துகளை பரப்பி வருவதை வன்மையாக கண்டிப்பாதாக தெரிவித்தார்.

இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையே வன்முறையை தூண்ட முயற்சிக்கும் எச்.ராஜாவின் கொட்டம் அடக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்துக்களின் எதிரியாக எச்.ராஜா செயல்படுவதுடன் அவர்களை வன்முறைக்கு அழைத்து செல்கிறார் என குற்றம் சாட்டினர்.

வன்முறையை தூண்டி விட்டு அவர் காவல்துறை பாதுகாப்புடன் வீட்டில் இருப்பார் ஆனால் அவருடைய நச்சு பேச்சால் அப்பாவி மக்கள் வன்முறைக்கு தள்ளப்படுகிறார்கள் அவருக்கு சரியான பாடத்தை காவல்துறையினர் கற்பிக்க வேண்டும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *