பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் !

Comments (0) சுற்றுலா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

என அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக செவ்வாய்க்கிழமைகளில் பூங்கா மூடப்படும். பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 14, 15, 16 தேதிகளில் அதிகளவில் மக்கள் வருவார்கள். குறிப்பாக, காணும் பொங்கல் அன்று அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமையாக இருப்பினும், காணும் பொங்கலை முன்னிட்டு பார்வையாளர் வசதிக்காக பூங்கா திறக்கப்படும். அதேபோல், பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30மணி வரை டிக்கெட் வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே டிக்கெட் வழங்க 20 கவுன்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10 கவுன்ட்டர்கள் திறக்கப்பட உள்ளன. பாதுகாப்பு கருதி பூங்காவில் ஆங்காங்கே 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பார்வையாளர் தங்களின் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக வசதியாகக் கூடுதல் இடம், வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்படும் எதிர்பாராத உடல் நலக்குறைவு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்துடன் கூடிய மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மது, சிகரெட், பாலித்தீன் பை உள்ளிட்ட பொருட்களை பூங்காவிற்குள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. மீறிக் கொண்டு வருபவர்கள், பூங்காவினுள் அனுமதிக்கப் படமாட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மான்கள், புலிகள், குரங்குகள், சிங்கம், கரடி, முதலை, யானை, ஓநாய், ஒட்டகச்சிவிங்கி மற்றும் பல்வேறுவிதமான பறவை இனங்கள் உட்பட சுமார் 2,500 உயிரினங்கள் உள்ளன. இவற்றை கான பூங்காவுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் பண்டிகையின்போது வண்டலூர் பூங்காவில் ஏராளமான மக்கள் கூடுவார்கள். அதற்கான ஏற்பாடுகள் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே செய்யப்படும். ஆனால், 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வர்தா புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா கடுமையாக சேதமடைந்தது. அதைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், 2017ஆம் ஆண்டின் காணும் பொங்கலுக்குப் பூங்கா திறக்கப்படவில்லை. சீரமைப்புப் பணிகள் முடிந்து 2017 பிப்ரவரி 10 ஆம் தேதி பூங்கா திறக்கப்பட்டது. மேலும், கட்டணமும் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *