ஸ்கெட்ச் : விமர்சனம்

Comments (0) சினிமா, விமர்சனம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
நடிகர்கள்-
 • ஸ்கெட்ச்
 • 'கபாலி' விஷ்வந்த்
 • விக்ரம் ,தமன்னா
 • ஸ்கெட்ச் 2

, ரவி கிஷான், சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், ஹரீஷ், ஸ்ரீமன்,விஸ்வந்த், மதுமிதா, சாரிகா

இயக்கம்விஜய் சந்தர் 
‘இருமுகன்’ படம் வெளிவந்து கிட்டத்தட்ட 15 மாதங்களுக்குப் பிறகு சியான் விக்ரம், தமன்னா நடிப்பில் ‘வாலு’ இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் ஸ்கெட்ச்.
வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் செய்யும் சேட்டாக ஹரிஷ் பெரடி. இவரது வலது கையாக வாடிக்கையாளர்களின் வாகனங்களை சீஸ் செய்பவர் அருள்தாஸ். ஒரு தகராறில் அருள்தாஸின் கை வெட்டப்பட, அவரது இடத்துக்கு வருகிறார் ஸ்கெட்ச் விக்ரம். அந்த இடத்தைப் பிடிக்க நினைத்திருந்த ஆர்.கே.சுரேஷ் இதனால் அவர்களிடமிருந்து வெளியேறி தொடர்ந்து இவர்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். அருள்தாஸ் செய்த வண்டி சீஸ் செய்யும் வேலைகளை கச்சிதமாக முடித்து நம்பிக்கையைப் பெறுகிறார் விக்ரம். விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ்ஸே ஆகாது என்பதால் பயங்கர செல்வாக்கு. ஒரு வண்டியைத் தூக்கும்போது பார்க்கும் தமன்னாவை காதலிக்கத் தொடங்குகிறார் விக்ரம். தமன்னாவும் தன்னைக் காதலிப்பதாக நண்பர்களிடம் கெத்துக்காக பொய் சொல்லி பிறகு உண்மை தெரிந்து விடுகிறது. பிறகு, தனக்கு இது சரியாக வராது என தமன்னாவை விட்டு விலக நினைக்கிறார் விக்ரம். விக்ரமை முதலில் கெட்டவனாகப் புரிந்துகொள்ளும் தமன்னா, பிறகு உண்மை அறிந்து காதலிக்கிறார். வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள்.இன்னொரு பக்கம் பிரபல தாதாவாக இருக்கும் குமாரின் காரை சேட்டின் ஆசைக்காக தூக்குகிறார் விக்ரம். விக்ரமின் சாகசத்தை சேட் கொண்டாட, அதைப் பொறுக்கமுடியாமல் விக்ரம் டீமை ஒவ்வொருத்தராக போட்டுத்தள்ள பிளான் போடுகிறார் குமார். அதன்படி, ‘கல்லூரி’ வினோத், ‘கபாலி’ விஷ்வந்த், ஶ்ரீமன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் ஆர்.கே.சுரேஷ்தான் என விக்ரம் அவரைத் தேட, ஆர்.கே.சுரேஷும் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். இந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்களை விக்ரம் ஒருபுறம் தேட, போலீஸ் இன்னொரு புறம் தேடுகிறது.விக்ரமின் நண்பர்களைக் கொலை செய்தவர்கள் விக்ரமின் கைகளில் சிக்கினார்களா, என்பதே மீதி கதை
வடசென்னையைப் பின்புலமாகக்கொண்டு வெளிவரும் படங்களில் அங்கு வசிப்பவர்களை ரவுடிகளாக, அடியாள்களாக, குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களாகவே சித்திரித்துவந்த தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சில நல்ல மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருந்தது. ஆனால், ஸ்கெட்ச் மறுபடியும் அந்தப் பழைய பாதையிலேயே பயணம் செய்கிறது.
நடிகர்களின் பங்களிப்பு

சியான் விக்ரமின் நடிப்பிற்குத் தீனிபோடும் கேரக்டர் இல்லையென்றாலும், பழைய ஜெமினி விக்ரமை திரையில் பார்த்த திருப்தி அவரது ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும். சண்டைக்காட்சிகளில் பெரிதாக உழைத்திருக்கிறார் விக்ரம். மற்றபடி ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கம்போல் ஸ்கோர் செய்து அசத்தியிருக்கிறார். ‘தர்மதுரை’யில் பெரிதாகக் கவர்ந்த தமன்னாவிற்கு இப்படத்தில் பெரிய வேலை எதுவும் இல்லை. ஒன்றிரண்டு காதல் காட்சிகளில் தோன்றிவிட்டு, விக்ரமுடன் 2 பாடல்களுக்கு டூயட் பாடுவதோடு அவரின் வேலை முடிவடைந்துவிடுகிறது. மெயின் வில்லன் பாபுராஜிற்கு வழக்கமான வில்லன் வேலை. பெரிய பில்டப்புகளுடன் அறிமுகமாகி கடைசியில் ஹீரோவால் கழுத்தறுபட்டு சாகிறார். ஆர்.கே.சுரேஷின் கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. காமெடிக்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் சூரியால் ஒரு காட்சியில்கூட சிரிக்க வைக்க முடியவில்லை. விக்ரமின் ஃபிரண்ட்ஸாக வரும் ஸ்ரீமன், விஸ்வந்த் உள்ளிட்டவர்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் மீண்டும் அரைக்கப்பட்ட ஒரு மசாலா படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *