மோடி,அமித் ஷா இவர்கள் இந்துக்களே கிடையாது -பிரகாஷ்ராஜ்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல மோடிக்கு எதிரானவன்’ என்றும் மோடி,  மற்றும் அமித் ஷா இவர்கள் இந்துக்களே கிடையாது -பிரகாஷ்ராஜ் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், தன்னை விட பிரதமர் மோடி சிறந்த நடிகர் என்று கிண்டலடித்தார். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு பிறகு பிரதமர் மோடி மற்றும் சங்பரிவார் அமைப்புகளை பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று(ஜனவரி 18) இந்தியா டுடே சார்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிராகாஷ்ராஜ், துர்கா மட்டன் ஷாப், ஷிவா மட்டன் ஷாப் என்றால் உங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் படத்திற்கு செக்ஸி துர்கா என்று பெயர் வைத்தால் குற்றமா என்று கேள்வி எழுப்பினார். எந்தப் படமும் இந்துக்களுக்கு எதிரானது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவை சார்ந்த ஒருவர் என்னை இந்துக்களுக்கு எதிரானவர் என்று கூறினார். நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு தான் எதிரானவன். மேலும் மோடி அமித்ஷா இருவரும் இந்துக்களே அல்ல என்றும் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் குறுக்கிட்ட ஒருவர் ‘ இந்துகள் யார் என்று நீங்கள் எவ்வாறு கூறமுடியும்’ என்று கேள்வி எழுப்பியபோது, “நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்று அவர்களால் எவ்வாறு கூறமுடியும்” என்று திருப்பிக் கேள்வி எழுப்பினார். பிறரை கொலை செய்பவர்களுக்கு இந்துக்கஉட்பட யாரும் ஆதரவு தருவதில்லை என்றும் பிரகாஷ்ராஜ் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *