உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர ஓட்டல் திறப்பு!

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர ஓட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது.
துபாய் நாட்டில் சேக் சையது சாலையில் உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர ஓட்டல் கடந்த 2008-ம் ஆண்டு கட்டப்பட்டு வந்த இந்த புதிய ஓட்டல் இன்று திறக்கப்பட்டது . இந்த ஓட்டல் 75 மாடிகளை கொண்டது. 528 விருந்தினர்கள் அறைகளும், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம்,  4 ரெஸ்டாரண்ட்கள், திறந்தவெளி நீச்சல்குளம், சொகுசு குளியல் அறை, மசாஜ் அறை, தண்ணீரை பீய்ச்சி மசாஜ் செய்யும் ஜக்குஜி உள்ளிட்ட வசதிகள் இந்த ஹோட்டலில் இடம் பெற்றுள்ளது.
ஜவோரா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டலுக்கு தங்க நிற கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓட்டல் 356 மீட்டர்(1,168 அடி) உயரம் கொண்டது. ஏறக்குறைய கால் மைல் தொலைவு உயரம் கொண்டதாகும்.
2020ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 2கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் நாடு சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓட்டல் உலகின் மிக உயரமான விடுதியாக கருதப்படும் துபாயின் ஜே.டபிள்யு. மரியாட் மார்க்குஸ் விடுதியை விடவும் ஒரு மீட்டர் கூடுதலான உயரம் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *