நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை!

தேசிய ஊரக திட்டத்தில் வேலை வழங்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக் களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் சங்கரலிங்கம்,மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட கூவாச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு தேசிய ஊரக திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று கூறி அடையாள அட்டைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலெக்டரிடம் மனு கொடுக்க செய்தனர்.அந்த மனுவில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் எங்கள் கிராம மக்களுக்கு வேலை வழங்க வேண்டும்.அந்த வேலைக்கு உரிய சம்பளம் முழுவதுமாக வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *