இளைஞர் காங்கிரஸ் தலைவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை!

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் நாட்டு வெடிகுண்டு வீசி ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

கேரள அரசியலில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் ஆதிக்கம் அதிகமுள்ளது. இந்த இரு கட்சிகளின் கூட்டணிகளே ஆட்சியில் இருந்து வருகின்றன. பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கேரளாவில் வளர்ச்சியடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வருட சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி முதன்முறையாக ஒரு தொகுதியை கைப்பற்றியது.

எனினும், ஆளும் இடதுசாரி அமைப்பினருக்கும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுஹைப் (வயது 30) நேற்று நள்ளிரவு கும்பல் ஒன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து நிலைகுலைந்த அவர் மீது அந்த கும்பல் ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுஹைப் கண்ணூர் நகரில் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டார். பின் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னால் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டிருக்க கூடும் என போலீசார் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *