அனைத்துக்கட்சியினருடன் பிரதமரை சந்திக்க முதலமைச்சர் திட்டம்

Comments (0) அரசியல், ஆன்மிகம், இந்தியா, செய்திகள், முன்னோட்டம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வரும் 24-ம் தேதி பிரதமர் மோடியை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆளுநர் மாளிகையில் சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.வரும் 24-ம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருசக்கர வாகனத்துக்கு மானியம் வழங்கும் திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி மறுநாள் 25-ம் தேதி டெல்லி திரும்புகிறார். இந்நிலையில், ஆளுநர் மாளிகையிலேயே பிரதமர் மோடியை சந்தித்து காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகவும், மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளுடன் சந்திக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *