தமிழ் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் கைது

Comments (0) இந்தியா

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

images (2)பெங்களூரில் தமிழ் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தமிழகத்தைச் சேர்ந்த பிரியா பெங்களூரு ஈஜிபுராவில் வசித்து வந்தார். இவருக்கு வயது 25. கடந்த 24-ம் தேதி இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, பிரியா அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் நஞ்சாபுரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மாதேஷ் என்பவரை கைது செய்தனர். பிரியாவை கொலை செய்ததை இவர் போலீசாரிடம் ஒப்புக் கொண்டார்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”பிரியாவின் நிஜ பெயர் ஹொன்னம்மா. கணவர் மற்றும் 2 குழந்தைகளைப் பிரிந்து கடந்த 8மாதங்களுக்கு முன்பு பிரியா பெங்களூர் வந்தார். பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டார். இந்த நிலையில், ஐ.பி.எல். சூதாட்டத்திற்காக, பெங்களூருக்கு அடிக்கடி வந்து செல்லும் நஞ்சாபுரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மாதேஷ் என்பவருடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி, மகாதேவபுராவில் இருவரும் சேர்ந்து வசித்து வந்தனர். அப்போது பிரியாவுக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் பிளேடால் பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மதேஷ் தப்பிச் சென்றுள்ளார்” என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *