இந்தியாவில் முதன் முறையாக ரயிலில் சானிட்டரி நாப்கின் எந்திரம்!

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இந்தியாவில் முதன் முறையாக நேற்று ராஜ்தானி ரயிலில் சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று உலக மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த தினத்தை முன்னிட்டு, ரயில் பெட்டியில் சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி விரைவு ரயிலில் இந்த எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் ரூ.5க்குத் தரமான நாப்கின்கள் பெறலாம். இதற்குப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேற்கு ரயில்வே தலைமை அதிகாரி ரவீந்தர் பக்கர் கூறுகையில், “சோதனைக்காக முதலில் இந்த விரைவு ரயிலில் நாப்கின் வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற விரைவு ரயில்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்” எனக் கூறினார்.

பள்ளிகள், கல்லூரிகள் போன்ற முக்கியமான இடங்களில் சானிட்ரி நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *