சென்னை சைதாப்பேட்டை – டிஎம்எஸ் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை சைதாப்பேட்டை – டிஎம்எஸ் வரையிலான மெட்ரோ ரயில் சேவையின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்கப் பாதையிலும், மெட்ரோ ரயில் சேவை தற்போது இயங்கி வருகிறது. இதனையடுத்து சென்ட்ரல் – விமான நிலையத்துக்கு மெட்ரோ சேவை விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில் இதற்கான சோதனை ஓட்டங்கள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை சைதாப்பேட்டை – டிஎம்எஸ் வரையிலான மெட்ரோ ரயில் சேவையின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முன்னதாக நேரு பூங்கா- சென்ட்ரல் வரையிலான 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கான சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது.

இந்த மாத இறுதியில் பாதுகாப்பு ஆணையர் சோதனை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னர் ஏப்ரல் மாதம் முதல் இந்த வழித்தடங்களில் ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தின் அருகில் 50 அடி ஆழத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டரில் 4 வாசல்களைக் கொண்ட மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பயணிகளின் வசதிக்காக இங்கு 2 லிப்ட்கள் மற்றும் 3 நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகரப் பேருந்து கட்டணங்கள் உயர்ந்துள்ளதால், மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் எஞ்சியுள்ள நேரு பூங்கா – சென்ட்ரல் மற்றும் அண்ணா சாலை வழியாக விமான நிலையத்தை இணைக்கும் பணிகளில், மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான வரைபடம் வெளியாகியுள்ளது. இரண்டாம் கட்டமாக சென்னையில் 3 வழித்தடங்களில் 104 ரயில் நிலையங்கள் அமையவுள்ளது. இதற்கான 108 கிமீ தூரத்திற்கான ரயில் திட்ட வரைபடத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் உயர்மட்ட வழித்தடங்களிலும், சுரங்க வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும், கலங்கரை விளக்கம் முதல் சி.எம்.பி.டி வரையும் 3 இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த இரண்டாம் கட்டப் பணிகளில் 80 சதவிகிதம் சுரங்கப் பாதைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 85 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டுடன் மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *