சிங்கத்துக்கு நிகரான விஜயகாந்தை பார்ப்பீர்கள் – பிரேமலதா ஆவேசம்

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

திருச்சி மாவட்ட தேமுதிக சார்பில் தென்னூர் உழவர் சந்தையில் உலக மகளிர் தினப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தேமுதிக மகளிர் அணித் தலைவர் விஜயகாந்த் பேசுகையில், பெண்களுக்கு சரிசமமாகப் பேசும் வாய்ப்பை அளிக்கும் ஒரே கட்சி தேமுதிக. பெண்களைப் போற்றிடும் வகையில், மகளிர் தின விழா நடத்தும் கட்சியும் தேமுதிகதான்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், ஹெல்மெட் போடவில்லை என்பதற்காகத் துரத்திப்பிடித்து உஷாவை எட்டி உதைத்து அவரது மரணத்துக்குக் காரணமான காவல்துறை அதிகாரி காமராஜ் ஹெல்மெட் போட்டிருந்தாரா என்று கேள்வி எழுப்பிய அவர், “ காவல் துறை என்பது மக்களைக் காக்கும் துறையாக இருக்க வேண்டும். காவு வாங்கும் துறையாக இருக்கும் காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், தீவிரவாதிகள் அனைவரும் சுதந்திரமாகச் சுற்றும் இந்த நாட்டில் ஹெல்மெட் போடவில்லை என்பது அவ்வளவு பெரிய குற்றமா?

சென்னையில் கல்லூரி வாசலில் அஸ்வினி என்ற பெண் கொல்லப்பட்டிருக்கிறார். பெண்கள் நேர்மையாகவும், தைரியமாகவும், பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் உடையவராகவும், ஆண் இனத்தை மதிப்பவராகவும் இருக்க வேண்டும். ஒருவரை நேசித்தால் கடைசிவரை முழுமையாகக் காதலித்து அவரைக் கரம்பிடித்து வாழ வேண்டும். கேப்டன் இல்லாத நான் ஜீரோ. அவருக்கு ஈடுஇணை யாரும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

தேமுதிக பொதுச் செயலர் விஜயகாந்த் மீதான விமர்சனத்துக்குப் பதில் அளித்த அவர், “சிலர் ஏளனமான வாய்க்குவந்ததைப் பேசிக்கொண்டிருக்கின்றனர். மீண்டும் சிங்கத்துக்கு நிகரான விஜயகாந்தை நீங்கள் பார்ப்பீர்கள். மைக்கைப் பிடித்தால் ஒரு மணிநேரம் பேசக்கூடிய விஜயகாந்தை மீண்டும் பார்ப்பீர்கள். அவர் நடந்தால் ராஜா மாதிரி நடப்பார். அந்த வீர நடையைப் பார்ப்பீர்கள். எங்களுக்குக் காலம் வரும். அன்று விஜயகாந்த் யார், அவரது தொண்டர்கள் யார் என்பதை அனைவரும் பார்ப்பார்கள்” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

பெரியாரைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை என்று குறிப்பிட்ட பிரேமலதா, “பெரியார் சாதாரண தலைவர் அல்ல. பெரியாருக்கு நிகர் பெரியார்தான். அதேபோல், புதிது புதிதாக பலர் அரசியலுக்கு வருகின்றனர். யார் வந்தாலும் கவலையில்லை. தமிழகத்தில் சிறந்த தலைமையை விஜயகாந்த் தலைமையில் அளித்து, மக்களாட்சியைத் தருவோம். வரும் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பைத் தர வேண்டும்” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *