விமான விபத்து : 50 பேர் உயிரிழப்பு !

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய வங்காளதேச விமானம் மோதி விபத்தில் சிக்கியது.
டாக்காவில் இருந்து விமான பணியாளர்கள் உள்பட 71 பேருடன் புறப்பட்ட யுஎஸ் பெங்கலா விமானம் 2:20 மணியளவில் காத்மாண்டு சென்றது. விமானம் அங்கு தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து விலகி சென்று விமானம் அருகே இருந்த கால் பந்து மைதானத்திற்குள் புகுந்து தீ பிடித்து எரிந்தது. விபத்து நேரிட்டதும் மீட்பு பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டது.
விபத்து தொடர்பாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் பிரேந்திரா பிரசாத் பேசுகையில், “நாங்கள் விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறோம், விரைவில் விரிவான தகவல்களை தெரிவிப்போம்,” என கூறிஉள்ளார். விமானம் தரையிறங்கிய போது நிலைத்தடுமாறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாகவே விமானம் விபத்துக்குள் சிக்கியது எனவும் தெரிவிக்கப்பட்டது. விபத்து நேரிட்ட பகுதியில் இருந்து 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர், அவர்கள் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.
விமானம் விபத்துக்குள் சிக்கியதை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டது, விமான சேவை தடைப்பட்டது. மீட்பு பணியில் நேபாள ராணுவம் இறங்கியது. விமானத்தில் எரிந்துக்கொண்டு இருந்த தீயை ராணுவ வீரர்கள் விரைவாக அணைத்தனர், விமானத்தை குளிர்விக்கும் பணியும் நடைபெற்றது. இதனையடுத்து விமானத்திற்குள் இருந்தவர்கள் நிலை என்னவென்று பார்க்கப்பட்டது. அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் விமானத்தில் இருந்து மீட்பு குழுவினர் மிகவும் மோசமாக எரிந்த நிலையில் உடல்களை மீட்டு உள்ளனர் என செய்தி தெரிவித்தனர்.
விமானத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டாலும் உயிரிழப்பு இருக்கும் என அஞ்சப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து மிகவும் மோசமான நிலையில் எரிந்த உடல்களை மீட்பு குழுவினர் மீட்டதை பார்த்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவன செய்தியாளர் தெரிவித்து உள்ளார்.
50 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் விமானம் விபத்தில் சிக்கியதில் 38 பேர் உயிரிழந்தனர் என நேபாள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 23 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 10 பேரது நிலை என்னவென்று இதுவரையில் தெரியவில்லை என போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. இதற்கிடையே 50 பேர் உயிரிழந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது. 50 பேர் உயிரிழந்தனர் என ராணுவ செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டு உள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *