தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் ரத்து – ஆட்சியர் என்.வெங்கடேஷ்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டால், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பின்னர் ஆட்சியர் என்.வெங்கடேஷ் செய்தியாளர்களிடம்கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் 1,37,808 குழந்தைகளுக்கு சொட்டு மருத்து அளிக்கப்பட்டுள்ளது. நாளை வரை வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.
கோடைகாலம் துவங்கி உள்ளதால் பாபநாசம் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர், மருதூர் மேலகால் கீழகால், அணையில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது.
தொழிற்சாலைகளுக்கு 20 எம்எல்டி தண்ணீர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது 10 எம்எல்டி மட்டுமே வழங்கப்படுகிறது. கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டால், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்படும். ஆலந்தலை கிராமத்தில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் முதல்கட்ட ஆய்வுப்பணிகள் முடிந்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இங்கு நன்னீர் உற்பத்திக்கு அதிக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால், அடுத்தக்கட்டப் பணிகள் துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விரைவில் பணிகள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வளரச்சிப் பணிகளில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இரட்டை ரயில்பாதை, 4வழிச் சாலை, 6வழிச்சாலை, போன்ற திட்டங்கள் வேகமாக நடந்து வருகிறது. கடம்பூர் முதல் எப்போதும்வென்றான் வரையிலா சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்ற சாத்தியம் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த சாலையையும் 4 வழிச்சாலையாக மாற்ற ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்பட்டுள்ளது. தூத்துக்குடி – மதுரை இடையே 6 வழிச் சாலை அமைப்பது தொடர்பாக முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. கோவில்பட்டி, கயத்தாறு, எப்போதும் வென்றான், கடம்பூர் பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *