ஆத்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாடம் !

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ”ரசாயன குண்டு வீசி கொன்று குவிக்கப்படும் அப்பாவிகளான சிரிய மக்களை பாதுகாக்க ஐ.நா.சபை உடனடியாக தலையிட வலியுறுத்தி ஆத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அஸாருதீன்,  துணைத் தலைவர் தமீம், துணைச் செயலாளர்கள் சிக்கந்தர், இமாம்பரீது, நாஸர், மாணவரணி செயலாளர் ஷமீம், மருத்துவ அணி செயலாளர் ரஷீத்காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, சிரியாவில் ரசாயன குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள். நாள்தோறும் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் சென்று கொண்டே இருக்கிறது.
ஆட்சியில் அமர்ந்துகொண்டு மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக சொந்தநாட்டு மக்கள் என்றும் பாராமல், அவர்களை வேட்டையாடி வருகிறது ஷியா மதத்தைச் சேர்ந்த  மனித மிருகம் பஸார் அல் ஆஸாத். தன் இனத்தைச் சேர்ந்தவனுக்கு உதவவேண்டுமே என்று சிரியா விவகாரத்தில் ஆயுதங்களை அன்பளிப்பாக கொடுத்து வேட்டையாடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்கிறது ஷியா மதத்தின் தலைமை பீடமாக விளங்கும் ஈரான்.
சிரியாவை பிடித்து வைத்துக்கொண்டு தனது ஆதிக்கத்தை நிறுவவேண்டும் என்ற எண்ணத்தில் ரஷ்யா என்ற வெறி பிடித்த மிருகமும் அரக்க அரசோடு கைகோர்த்து அப்பாவி மக்களை கொல்வதில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கொலைப் படலத்தை நிகழ்த்தி வருகிறது. ஒன்றுமே அறியாத பிஞ்சுக்குழந்தைகளின் சிதைக்கப்படும் புகைப்படங்களை காண்போரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. உயிர் பயத்தில் அவர்களின் அழுகுரல்களும் கதறல்களும் செவிப்புலனையும் கிழித்துக் கொண்டு உள்ளத்தை துளைக்கிறது.
உலக வரலாற்றில் யாருமே நிகழ்த்தியிராத, குழந்தைகளைக் குறிவைத்து படுகொலைகளை நிகழ்த்திவரும் சிரியா அரசை கண்டிக்காமல் உணர்வற்றுக் கிடக்கின்றன உலக நாடுகள். ஐ.நா. சபையோ கோமாவில் உறங்கிக் கொண்டிருக்கிறது. இதுஒருபுறமிருக்க நிவாரணப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக வரும் சிரியா முஸ்லிம் பெண்களை தங்கள் பங்கிற்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற ஈன புத்தியோடு பாலியல் வன்கொடுமை செய்கிறது சிரியா சென்றுள்ள ஐ.நா. சபையின் நிவாரணக்குழு.
தன்னை தட்டிக்கேட்பதற்கு யாரும் இல்லை என்று அகங்காரத்தில் குள்ளநரிகளோடு கூட்டுச் சேர்ந்து அப்பாவி சிரிய மக்களைக் கொன்று குவித்து வரும் மனித மிருகம் பஸார் அல் அஸ்ஸாத்தையும், அந்த கொலைகாரனோடு கூட்டுச் சேர்ந்து அந்நிய நாட்டு மக்களைக் கொல்லும் ஈரான் மற்றும் ரஷ்யாவையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
ஐ.நா. சபையானது உடனடியாக கோமாவில் இருந்து எழுந்து சிரியா விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். அங்குள்ள மக்களை பாதுகாத்திடவேண்டும். இந்திய அரசும் போரின் மூலமாக குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் கண்டனங்களை வெளிப்படுத்திடவேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, சிரிய  அரசிற்கு எதிராக கண்டனகோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில்  மாவட்ட துணை தலைவர் தமீம் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகளோடு ஆத்தூர் கிளைத்தலைவர் இமாம்ஹாஜா முஹைதீன், செயலாளர் செய்யது சிராஜ்தீன், பொருளாளர் செய்யது அப்பாஸ் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *