புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Comments (0) ஆன்மிகம், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
நாசரேத்-கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா பங் குத்தந்தை அந்தோணி இருதய தோமாஸ் தலைமையில் பங்குத்தந்தை ராபின்சன் கொடியேற்றி வைத்ததுடன் திருவிழா துவங்கியது.
பிரகாசபுரம் பங்கிற்குட்பட்ட நாசரேத்-கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா பங்குத்தந்தை அந்தோணி இருதயதோமாஸ் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி பங்குத்தந்தை ராபின்சன் கொடியேற்றி வைத்தார்.
கொடியேற்று விழாவில் பிரான்சிஸ் கிறிஸ்டோபர் ரத்தினராஜ் அந்தோணிராஜ் ராபின் உள்பட பங்கு மக்கள் திரளாககலந்துகொண்டனர்.வருகிற 19 ஆம்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு அருட்தந்தையர்கள் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறும். தொடர்ந்து அசனம் நடைபெறுகிறது.திருவிழா காலங்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெப மாலை திருப்பலி நோயாளிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை அந்தோணிஇருதயதோமாஸ் தலைமையில் நாசரேத்-கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலய மக்கள் செய்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *