புதுச்சேரி மாணவர்களுக்காக, 71 மருத்துவ சீட்கள் காலியாக உள்ளதாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அறிவித்தார்.அம்மாநிலத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, சீட் ஒதுக்கும் பணிகளை, துணை நிலை ஆளுநர் கிரண் பேடியே நேரில் மேற்கொண்டுள்ளார். இதன்படி, நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, மொத்தம் 71 மருத்துவ சீட்கள் காலியாக உள்ளதாகவும், இவை தகுதியான மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கிரண் பேடி திடீரென அறிவித்தார்.மாநில முதல்வர் நாராயணசாமி, கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் கிரண் பேடி இவ்வாறு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது
71 மருத்துவ சீட்கள் காலியாக உள்ளதாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அறிவித்தார்
