நடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்!

 • நடராஜன் இறுதிச் சடங்கு 2
 • நடராஜன் இறுதிச் சடங்கு

நடராஜன் தன் வாழ்வில் பல பயணங்கள் செய்திருக்கிறார். பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். ஆனால் தஞ்சை அருளானந்த நகரில் இருந்து இன்று மாலை தான் எங்கிருந்துப் புறப்பட்டாரோ அதே ஊரான விளார் கிராமத்துக்கு உயிரற்ற உடலாகப் புறப்பட்டார்.

நேற்று இரவு சசிகலா அருளாந்த நகர் வீட்டுக்கு வந்ததும் நடராஜனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதிருக்கிறார். கடைசியாக சில மாதங்கள் முன்பு அவரை சசிகலா சென்று பார்த்தபோது கூட அவரோடு முழுமையாக பேச முடியவில்லை. நேற்று இரவு முதல் நடராஜன் உடல் அருகிலேயே உட்கார்ந்திருந்த சசிகலா அஞ்சலி செலுத்த வந்த தலைவர்கள் அனைவரிடமும் தேம்பித் தேம்பி பேசினார்.

நடராஜன் முகத்தைப் பார்த்து கதறியழுதவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைத்தும் சொல்லியும் அழுதார். ‘இந்த நிலைமைக்கு ஆளாகிக்கிட்டு என்னை அனாதையாக விட்டுவிட்டு போயிட்டிங்கிளே ’ என்று அவர் ஆவேசமாக அழுதபோது உடல்நிலையை அறிந்த குடும்பத்தார்கள் சசிகலாவை சமாதானம் செய்து முதல் தளத்தில் அழைத்துபோய் ஓய்வு எடுக்கச்சொன்னார்கள். பழநெடுமாறன், திருமாவளவன், சீமான், கருணாஸ், தமிமுன் அன்சாரி, ஶ்ரீதர் வாண்டையார், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு போன்ற தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு எதிரே இருக்கும் நடராஜனுக்கு சொந்தமான தோப்பிலேயே அவரை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

இறுதி ஊர்வலத்துக்காக உடல் தயாராவதற்கான வேலைகள் தொடங்கியதும், முதல் தளத்துக்கு சென்று கொஞ்சம் ஓய்வெடுத்த சசிகலா பின் 3 மணிக்கு கீழே இறங்கி வந்துவிட்டார். மாலை 4.40 மணியளவில் நடராஜன் உடலை சுமந்தபடி வாகனம் புறப்பட்டு 3 கிலோ மீட்டர் தூரம் இரண்ட மணிநேரம் மாலை 6.40 மணியளவில் இறுதி ஊர்வலம் சென்றடைந்தது. கட்சி பேதம் இல்லாமல் தமிழகம் முழுவதில் இருந்தும் அரசியல்வாதிகள், இலக்கிய ஆர்வலர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

சசிகலா தனது கணவருக்கு இறுதி மரியாதை செய்ய விரும்பி, நானும் தோப்புக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவரை உறவினர்களும், சமூகத்தினரும் சம்பிரதாயங்களை சொல்லி இடுகாடு செல்ல தடைபோட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *