அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
நாடாளுமன்ற மாநிலங்களவை சசிகலா புஷ்பா (வயது 41). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகாவில் உள்ள குடும்ப நல கோர்ட்டு முதன்மை நீதிபதி பி.ஆர்.கேடியா முன்னிலையான அமர்வு முன்பாக பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தனர்.
 • sasikala maregi inv
 • சசிகலா புஷ்பா
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று இவர்கள் இருவருக்கும் இடையிலான விவாகரத்துக்கு அனுமதி வழங்குவதாகவும் இருவரும் அவரவர்களின் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.இதற்கிடையே சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் வருகிற 26-ந் தேதி மறுமணம் நடைபெறுவதாக பரபரப்பு தகவல் வெளியானது. இது தொடர்பான திருமண அழைப்பிதழ் ஒன்று முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் நேற்று வலம் வந்தது. இதன் உண்மைத்தன்மை பற்றி அறிந்து கொள்வதற்காக டெல்லி செய்தியாளர்கள் சசிகலா புஷ்பாவை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ராமசாமி என்பவரை 2 வதாக திருமணம் செய்ய சசிகலா புஷ்பா ஏற்பாடு செய்து வந்தார்.  இந்த நிலையில்  ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கில் குடும்ப நல நீதிமன்றம்  சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *