சென்னை ஐஐடி மாணவர் மீது தாக்குதல்-, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

Comments (0) இந்தியா

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

download (1)சென்னை ஐஐடி மாணவர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கேரளாவைச் சேர்ந்த சூரஜ் என்ற மாணவர், சென்னையில் உள்ள ஐஐடி.,யில் பிஎச்டி படித்து வருகிறார். இந்நிலையில், இவர் மத்திய அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிராக விதித்த தடையை எதிர்த்து, சக மாணவர்களுடன் இணைந்து, மாட்டுக்கறி திருவிழா ஒன்றை, ஐஐடி வளாகத்தில் நடத்தியுள்ளார்.இதற்குப் பழிவாங்கும் வகையில், பாஜக.,வின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர், சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கண்களில் படுகாயமடைந்த சூரஜ், சங்கர நேத்ராலயாவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த தாக்குதல் சம்பவம் பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘’மாணவர் சூரஜ் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எதிர்பாராத ஒன்று. இதனை கண்டிக்கிறேன். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்,’’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *