இந்தியா – நேபாளம் இடையே ரயில் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து

Comments (0) இந்தியா, உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இந்தியா – நேபாளம் இடையே ரயில் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.நேபாள பிரதமர் ஷர்மா ஒலி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பல்வேறு அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் அவர், இன்று நடைபெற்ற இந்தியா – நேபாளம் இடையேயான ஒப்பந்தங்கள் மற்றும் குழாய் மூலம் எரிப்பொருள் வழங்கும் திட்டத்தின் அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா – நேபாளம் இடையே ரயில் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து திட்டங்கள் தொடங்கினால், சரக்கு போக்குவரத்து எளிமையாக்கப்படும் என்றும், அதன் ஒரு பகுதியாக டெல்லி – காத்மண்ட் இடையேயான ரயில் பாதை திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையேயான பெட்ரோல் உள்ளிட்ட எரிப்பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்லும் திட்டத்தை இரு பிரதமர்களும் தொடங்கிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *