கர்நாடகா இந்தியாவில் உள்ளதா? அ.இ.எம்.ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கர்நாடக மாநிலம் இந்தியாவில்தான் உள்ளதா இல்லையா என அனைத்திந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் கேள்வி எழுப்பி உள்ளது. அனைத்திந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் அறிமுக விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்ஜிஆர் நம்பி கர்நாடக மாநிலத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். தமிழக கட்சிகள் எத்தனை போராட்டஃங்களை நட்த்தினாலும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை தரப்போவதில்லை என்றார். கர்நாடக மாநிலத்தை பணியவைக்க வேண்டும் என்றால் அந்த மாநிலத்திக்கு செல்லும் மின்சாரத்தை தடை செய்ய வேண்டும். அங்கு செல்லும் பொருட்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.  1986-ல் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை நல்கியவர் எம்ஜிஆர் என்றும் அவர் நினைவு கூர்ந்தார். கர்நாடக மாநிலத்தை பணியவைக்க வேண்டும் என்றார் அங்கு செல்லும் மயூர ஆற்று நீர் திருப்பி விடப்பட வேண்டும் தமிழகத்தில் தடுப்பு அணைகள் கட்டப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமருக்கு கருப்பு கொடி காட்டிம் போராட்டம் நடத்துவது ராணுவத்துக்கு எதிரானது என்றும் நடிகர் ரஜினி , எம்ஜிஆர் தமக்கு உதவியதாக கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் என்றும் விமரசித்தார். கர்நாடக மாநிலம் இந்தியாவில்தான் உள்ளதா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில்   தொடர இருப்புதாக கூறிய எம்ஜிஆர். நம்பி, தங்களது கட்சியில் அனைத்து மாநிலங்களுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் கர்நாடக மாநிலத்தில் தங்களது கட்சி செயல்படவில்லை என்றும் கூறினார். கர்நாடகா இந்தியாவில் இருந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தி இருக்கும் என்றும் அதனை செய்வதற்கு முனவராத கர்நாடக இந்தியாவில் உள்ளதா என்ற கேள்வி எழுந்து இருப்பதாகவும் எம்ஜிஆர்.நம்பி கடுமையாக விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *