காவிரி விவசாயி பிரச்சனை மட்டும் அல்ல தமிழ் இனத்தின் பிரச்சனை: ஸ்டாலின் பேச்சு

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, பேட்டி

காவிரி விவசாயி பிரச்சனை மட்டும் அல்ல தமிழ் இனத்தின் பிரச்சனை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, காவிரி உரிமை மீட்பு பயணத்தை , தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார். முன்னதாக,யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், காவிரி உரிமை மீட்பு பயணம் அரசியலுக்காக அல்ல என்றும், தமிழகத்தின் ஒட்டு மொத்த குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் பயணம் எனவும் தெரிவித்தார்.காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *