இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன ஹைடெக் டயக்னோஸ்டிக் கோபாஸ் e801 தொடக்கம்

Comments (0) இந்தியா, உலகம், செய்திகள், மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இந்தியாவிலேயே முதன்முறையாக ஹைடெக் டயக்னோஸ்டிக் சென்டரில் கோபாஸ் 801 என்ற கருவி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கருவியை ஹைடெக் டயக்னோஸ்டிக் மையத்தின்இந்திய நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மருத்துவர் எஸ்.பி.கணேசன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோபாஸ் மருத்துவ கருவி மூலம் ஒரே ரத்த மாதிரியில் 2530 சோதனைகள் செய்ய முடியும் என்றார். சுவிட்சர்லாந்தின் ரோச் நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவி ஹிட்டாச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவர் கணேசன் கூறினார்.

ஹைடெக் டயக்னோஸ்டிக் பரிசோதனை மையத்துக்கு சென்னை,திருவள்ளூர், வேலூர்,சேலம், ஈரோடு, நெல்லை,தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிளை உள்ளது என்றும் மருத்துவர் கணேசன் தெரிவித்தார். இந்த ஆண்டு மேலும் 40 கிளைகள் தொடங்கி 100- கிளைகளை எட்டுவதே இலக்கு என்றும் அவர் கூறினார். இந்த விழாவில் ரோச் டயக்னோஸ்டிக்  இந்திய மேலாண் இயக்குனர்மருத்துவர் ஷ்ரவன் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *