சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நோயாளிகளை பேணும் மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட நோயாளிகளை பேணும் மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக பேசிய பிரதமர் மோடி, தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.. மேலும், 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டங்களும் தொடங்கப்பட்டன.