ராணுவ தளவாட உற்பத்தி இந்திய-ரஷ்ய இடையே ஒப்பந்தம்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

திருவிடந்தையில் நடைபெறும் கண்காட்சியில் இந்திய-ரஷ்ய நிறுவனங்களிடையே இடையே ராணுவ தளவாட உற்பத்திக்கான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. திருவிடந்தை ராணுவ தளவாட கண்காட்சியின் ஒரு அங்கமாக இந்திய – ரஷ்ய பாதுகாப்புத்துறை சார்ந்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சக பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். ரஷ்ய தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரு நாட்டு நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்டன. இந்திய ராணுவ உற்பத்தித்துறை செயலாளர் அஜய்குமார் மற்றும் ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஒலேக் ரயசான்ட்சேவ் ((Oleg Ryazantsev )) ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து தளவாட உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

ரஷ்யாவில் பாதுகாப்பு உற்பத்தியில் ஈடுபடும் பொதுத்துறை நிறுவனமான Rosoboronexport – உடன்  இணைந்து கடற்படைக்கான சிறப்பு நடவடிக்கை வாகனங்கள், மற்றும் டர்பீடோ எனப்படும் கப்பல்களை தகர்க்கும் வெடிகுண்டுகள் மற்றும் நீர்மூழ்கிக்கான உந்து எந்திரங்கள்  உள்ளிட்டவை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களில் எல் அண்ட் டி நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

டர்பீடோ எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் அதிநவீன ராணுவ டாங்கிகள் தயாரிப்புக்கான ஒப்பந்தங்களும் இரு நிறுவனங்களிடையே கையெழுத்தானது. சுகோய் ரக விமானங்களுக்கு இலக்குகளை கண்டறியும் திறனை மேம்படுத்துவதற்கான உபகரணங்களை தயாரித்து வழங்கவும்,   கடற்படையில் பயன்படுத்தப்படும் Fregat ரேடார்களின் பராமரிப்பு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது தவிர ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட பாதுகாப்பு தளவாடங்களின் பராமரிப்புகளுக்கான ஒப்பந்தங்களும் இருநாட்டு நிறுவனங்களிடையே கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ உற்பத்தித்துறை செயலாளர் அஜய்குமார், ரஷ்ய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உற்பத்திக் கூடங்களை அமைப்பதற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *