ஜெயலலிதா மகள் என அம்ருதா உரிமை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னைஉத்தரவிட்டுள்ளது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் தம்மைப் பெற்ற தாய் என்பதை டிஎன்ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி,  அவரின் உடலை சடங்குகள் செய்வதற்கு தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் அளிக்க மேலும் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்றார். இதற்கு அம்ருதா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  உத்தரவிட்டு 3 மாதங்கள் ஆகியும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று கூறிய நீதிபதி வரும் வியாழக்கிழமைக்குள்  பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *