காவிரி பிரச்சினை : அரசியல் கட்சிகள் தோல்வி – பிரகாஷ்ராஜ்

Comments (0) இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

காவிரி பிரச்சினையை 70 ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் அரசியல் கட்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.பாஜக தலைமையிலான மத்திய அரசை பல்வேறு விவகாரங்களில் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுடன் சிறப்பு விமானத்தில் பெங்களூரு சென்றார். அங்கு முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவகவுடாவை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு குறித்து பேசிய பிரகாஷ்ராஜ், மூன்றாவது அணி என்பது பாஜக அல்லது காங்கிரசுக்கு எதிரானது அல்ல என்று தெரிவித்தார். மேலும் காவிரி பிரச்சினையை தீர்ப்பதில் அரசியல் கட்சிகள் தோல்வி அடைந்து விட்டன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *