சட்டமேதை அம்பேத்கரின் 128வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் முழு உருவப்படத்திற்கு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு,பிரதமர் மோடி,மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மூத்த பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு, மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அம்பேத்கரின் பிறந்தாள் நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குலாம் நபி ஆஷாத்,மல்லிகார்ஜுனே கார்கே உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா ஆகியோரும், அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.தமிழகத்தில் அம்பேத்கர் படத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தோழமை கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
