முன்னாள் மேயர் கணேசன் காலமானார்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், தியாராய நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சா.கணேசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 89. தி.மு.க.வில் தொடக்க காலம் முதல் இருந்து வந்த சா.கணேசன், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். தி.மு.க. தலைமை அலுவலகச் செயலராக இருந்த அவர் 1959, 1964, 1968-ஆம் ஆண்டுகளில் நடந்த மாநகராட்சி உறுப்பினர் தேர்தல்களில் தொடர்ந்து 3 முறை தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 1970 நவம்பர் முதல், 1971 நவம்பர் வரையிலான ஓராண்டு காலத்துக்கு சென்னை மேயராக இருந்துள்ளார். மேயராக இருந்தபோது மும்பையில் நடைபெற்ற இந்திய மேயர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகித்து, நாட்டில் உள்ள மாநகராட்சிகளில், ஒரே மாதிரியான வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அளித்தார். இந்நிலையில், வயது முதிர்வால் கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றியிருந்த சா. கணேசன், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இளைய மகன் வீட்டில் நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு, ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, முத்தரசன், ம.தி.மு.க. துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *