தெலுங்கு மொழியை காக்க கோரி சென்னையில் முதல் கூட்டம்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தெலுங்கு மொழியை காக்க கோரி சென்னையில் முதல் கோரிக்கை கூட்டம்  நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு தெலுங்கு மொழி போராளி சி.எம்.

  • telugu1jpg
  • telugu2jpg
  • telugu3jpg

கே .ரெட்டி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தெலுங்கு தாய் படத்திற்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சமக்சா பாரதி என்னும் பெயரில் நடைபெறும் இந்த கூட்டம் ஆந்நஃதிராவில் உள்ள 13 மாவட்டங்களிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாய பாடாமாக்கப்பட்டு இருப்பது போல் ஆந்திராவிலும் அமல்படுத்தப்படவேண்டும் என இந்தகூட்டத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தெலுங்கு மொழியை புறக்கணிக்கும் விதமாக நடந்து கொள்ளும் ஆந்திர அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் ஐதராபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமரஜூ, தெலுங்கு மொழி இயக்க தலைவர் சாமல ரமேஷ்பாபு, தெலுங்கு மொழி போராட்ட தியாகி சி.எம.கே ரெட்டி, ஆந்திரா கிளப் இணை செயலாளர் ஜே.கே ரெட்டி,அமர ஜீவி ஸ்ரீபொட்டி ஸ்ரீராமுலு பவித்ர ஸ்முருதி பரிரக்ஷன சமிதி தலைவர் ஜி.வேணு கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொட்டி ஸ்ரீராமுலுவை போற்றும் விதமாக சென்னயில் தெலுங்கு மொழிக்காக முதல் கூட்டம் நடைபெற்றதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *