ஸ்டெர்லைட் ஆலை குறித்து சிபிஐ விசாரணை தேவை தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் வலியுறுத்தல்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தொடக்கவிழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு வணிகர்சங்க நிறுவன தலைவர் மயிலை மாரிதங்கம்தலைஐ தாங்கினார் ஹாஜி மம்முசா, சிங்காரம், குணசீலன், டி.ஆறுமுகவேல் , ஏ.கே அப்துல் ஹாதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் புதிய நிர்வாகிகளை  அறிமுகம் செய்து வைத்து சங்க நிறுவன தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த வணிக சங்கத்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். ஆண்டு தோறும் வணிகர் சங்கம் சார்பில் சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு தினத்தை தமிழர்தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்.தமிழ்நாட்டு வணிகர்களின் நலனை காக்கும் விதமாக ஒவ்வொரு வணிகரையும் வணிக நலவாரியத்தில் உறுப்பினராக்க மகாஜனசங்கம் பாடுபடும். அரசின் ஆட்சியில் வணிகர்களின் பிரதிநிதித்துவத்தைபெற  அனைத்து முயற்சிகளையும் சங்கம் மேற்கொள்ளும். நாட்டின் வளர்ச்சி திட்டத்தைமுன்னிட்டு ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை தங்களது சங்கம் வரவேற்கும் அதே சமயம் 4 சதவீதத்துக்குள் அனைத்து வரிகளையும் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.சங்கத்தின் புதிய நிர்வாகிகள் விபரம்- நிறுவன தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், மாநில தலைவர் , மயிலை மாரிதங்கம், மாநில செயலாளர் அப்துல் ஹாதி, மாநில பொருளாளர்,கே.சந்திரசேகர் தலைமை நிலைய செயலாளர் டி.ஆறுமுகவேல், மற்றும் மாநில துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், சென்னை காஞ்சி ,திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *