காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கோரிக்கை

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தலைவர் ஜெ. ராஜ்குமார் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்தார். அப்போது 1988-ம் ஆண்டு இந்திய அரசால் நடைமுறப்படுத்தப்பட்ட பலநோக்கு சுகாதார பணியாளர் திட்டத்தின் கீழ் 5000 மக்கள் தொகைக்குஒரு சுகாதார ஆய்வாளரும்ஒரு கிராம செவிலியரும் நாடு முழுக்க நியமிக்கப்பட்டனர்.என தெரிவித்தார். அதன்படி 1990-களில்ஏறக்குறைய9000 கிராம செவிலியரும், 8000-க்கும் மேற்பட்டசுகாதார ஆய்வாளர் நிலை 2-ன் கீழ் ஆன பிரிவினரும் பணியில் இருந்ததாக தெரிவித்தார். அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப இருந்ததால் மலேரியா, வயிற்றுபோக்கு அம்மை நோய்கள் டெங்கு சிக்கன்குனியா போன்ற நோய்கள் கட்டுக்குள் இருந்ததாகவும் ராஜ்குமார் தெரிவித்தார். தற்போது ஒருலட்சம் பேருக்கு ஒருசுகாதார ஆய்வாளர் என்ற நிலை ஏற்பட்டு  உள்ளது என்றும் தற்போது போதிய ஆய்வாளர்கள் இல்லாததால் நோய்களை கட்டுப்படுத்துவதில் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் ஏற்பட்டு இருப்பதாகவும் ,டெங்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு ஆய்வாளர்கள் மாற்றப்படும் நிலை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே தங்களது பணி தொய்வின்றி நடைபெற ஏதுவாக இருக்கும் என்றும் ராஜ்குமார் கூறினார். மேலும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பொது சுகாதாரத்திறை இயக்குனர் அனுப்பும் கருத்துருக்கு நிதித்துறை ஒப்புதல் வழங்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த கடினமான சூழலில் தலைமை செயலாளர் உடனடியாக ஆய்வு கூட்டம் நடத்தி காலி பணியிடங்களை நிரபஃப வேண்டும் 25 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ள மூத்த சுகாதாராய்வாளர்கள் வட்டார பூச்சி கட்டுப்பாட்டு மேற்பார்வையாளராக நியமிக்கவும் நிதித்துறைக்கு உரிய அறிவுரை வழங்கியும் இன்றுவரை ஒப்புதல் வழங்க வில்லை என்றும் கூறினார். கூறினார். இந்த ஆண்டு காலிபணியிடங்களை நிரப்பாமலும் கூடுதல் பணி இடங்களை உருவாக்காமல் இருந்தால் டெங்கு தடுப்பு போன்ற சுகாதாரபணிகளில் வேறும் 900 சுகாதார ஆய்வாளர்களே ஈடுபட முடியும் இதனால்  நோய்களை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அரசு தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தமிழக மக்களை காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *