ஜெ.ரத்தமாதிரி தங்களிடம் இல்லை -அப்பல்லோ அறிவிப்பு

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜெயலலிதாவின்  ரத்த மாதிரி தங்களிடம் இல்லை என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெர்வித்துள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்க கோரி அம்ருதா என்ற பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளார்.  இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் குறித்து இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அப்போலோ நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.இதனிடையே, ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரத்தம், சிறுநீர் மாதிரி மட்டுமே எடுத்து வைத்ததாகவும், ஆனால் ஒராண்டுகளுக்கு மேல் ஆனாதல் ஆய்வு செய்வதற்கான தன்மையை இழந்து விட்டதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அம்ருதா  10 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை சந்தித்து தான் ஜெயலலிதா வின் மகள் என தெரிவித்ததாகவும், இது தொடர்பாக ஜெயலலிதா விடம் தெரிவித்த போது அப்படி யாரையும் தனக்கு தெரியாது என ஜெயலலிதா தெரிவித்ததாக புகழேந்தி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என எதிர்க்க தீபா,தீபக்கிற்கு மட்டுமே உரிமை உள்ளது. மற்றவர்களை இந்த வழக்கில் இணைக்க விரும்பவில்லை என நீதிபதி தெரிவித்துவிட்டார். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *