3 மருத்துவ மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துமனையின் இரு ஆண் மருத்துவர்கள், முதுகலை படித்துவரும் 3 மருத்துவ மாணவிகளை மிரட்டி பாலியல் வல்லூறவில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைத்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையின் இரு மருத்துவர்கள் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.கஸ்தூரிபாய் காந்தி மகபேறு மருத்துவமனையில் முதுகலை மகப்பேறு மருத்துவ மாணவிகள் 45 பேர் படித்து வருகின்றனர். அங்கு 13 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்குள்ள மருத்துவ மாணவிகள் 48 பேரும் கையெழுத்திட்டு பாலியல் புகார் கடிதம் ஒன்றையும், அதனுடன் வீடியோ ஒன்றையும் இணைத்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் விஜயாவிடம் அளித்துள்ளனர்.அந்த புகாரில் கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் மயக்கமருந்தியல் மருத்துவராக உள்ள கார்த்திகேயன், அறுவை சிகிச்சை நிபுணர் ரோஷன் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் முதல் 3 மருத்துவ மாணவிகளை, மருத்துவர்கள் பணி அறையில் வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகவும், அதனை அப்போது செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டு, மீண்டும் தங்கள் ஆசைக்கு இணங்கும் படி மிரட்டி வருவதாக குற்றஞ்சாட்டி இருந்தனர். மேலும் மருத்துவர் இளங்கோ என்பவர் இந்த சம்பவத்தை கண்டும் காணாமல் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர். மருத்துவர்கள் கார்த்திகேயன், ரோஷன் ஆகியோர் மாணவிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அந்த வீடியோ காட்சியையும் சிடி ஒன்றில் பதிவு செய்து ஆதாரமாக கண்காணிப்பாளர் விஜயாவிடம் ஒப்படைத்தனர். அந்த வீடியோ காட்சியை பார்த்த விஜயாவோ, இதுவெல்லாம் சகஜம் என்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அனுசரித்து செல்லும்படியும் கூறி அந்த இரு மருத்துவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாணவிகளை மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகின்றது.இதற்கு பின்னரும், அடங்காத அந்த இரு மருத்துவர்களும் மாணவிகளை மீண்டும் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி உள்ளனர் இதனால் செய்வதறியாது தவித்த மாணவிகள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதனுக்கும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கும் இந்த சம்பவம் குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த புகார் தொடர்பாக விசாரிக்கும்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்திக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத கண்காணிப்பாளர் விஜயா மீது நடவடிக்கை மேற்கொள்ள மாணவிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து திங்கட்கிழமை டீன் ஜெயந்தி தலைமையில் பெண் மருத்துவ பேராசிரியர்கள் அல்லி, அனுராதா,கீதா உள்ளிட்ட 5 பேர் கொண்டு விசாரணை குழு அமைக்கப்பட்டது.அந்த குழுவினர் செவ்வாய்கிழமை கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனைக்கு சென்று பாலியல் புகாருக்குள்ளான மருத்துவர்கள் கார்த்திகேயன், ரோசன், புகாரை பெரிதாக்க வேண்டாம் என்று மாணவிகளை மிரட்டிய கண்காணிப்பாளர் விஜயா ஆகியோரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அறிக்கை ராதாகிருஷ்ணனிடம் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.இதற்கிடையே முதற்கட்ட விசாரணையில் மருத்துவர்கள் கார்த்திகேயனும், ரோசனும் மாணவிகளிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும் ,இரு மருத்துவர்கள் மீதும் மருத்துவ ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.3 மருத்துவ மாணவிகளின் வாழ்வை சீரழித்ததோடு, அதனை செல்போனிலும் படம் பிடித்து மிரட்டல் விடுத்த அரசு மருத்துவர்கள் இருவரையும் பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *