7 வயது சிறுவனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை

Comments (0) செய்திகள், மருத்துவம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

காவேரி மருத்துவமனை நிபுணர் குழு சென்னையை சேர்ந்த பிரதீஷ் என்ற 7 வயது சிறுவனுக்கு மிகவும் சிக்கலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளது. டாக்டர் . பாலசுப்பிரமணியம் தலைமையில் அமைந்த காவேரி ஆஸ்பத்திரியின் சிறுநீரகவியல் வல்லுனர் குழுவானது சிறுவன் பிரதீஷ்கு மிக சிக்கலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மிக வெற்றிகரமாக நிகழ்த்தியது இது குறித்து செய்தியாளரிடம் பேசிய டாக்டர் பாலசுப்பிரமணியம்,எங்களது கடந்த 20 ஆண்டு அனுபவத்தில் 700-க்கும் மேற்பட்ட மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளளோம் ஆனால் எங்கள் குழு இதுப்போன்ற சவாலான சிகிச்சையை மேற்கொண்ட தில்லை. குழந்தைகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை என்பது ஆபத்து அளிக்கக்கூடியது என்பதை விட. மூன்று அறுவை சிகிச்சைகள் அதே நாளில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.இந்த சிறுவனின் அறுவை சிகிச்சையில் அவரது தந்தையே சிறுநீரகத்தை வழங்க மகிழ்ச்சியுடன் சம்மதித்தார் என்பது சிறப்பு அம்சமாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *