கொடைக்கானலில் வினாடி வினா நிகழ்ச்சி

Comments (0) சுற்றுலா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கொடைக்கானலில் பிரயண்ட் பூங்காவில் கோடைவிழாவின் முன்னோட்டமாக வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் பசுமை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் கோடைவிழாவின் ஐந்தாவது நாளான இன்று சுற்றுலாத்துறை மற்றும் கொடைக்கானல் இண்டர்நேஷனல் பள்ளியும் இணைந்து நடத்திய வினாடி வினா நிகழ்ச்சியை கொடைக்கானல் வருவாய் கோட்டாச்சியர் மற்றும் சுற்றுலா உதவி அலுவலர் ஆனந்தன் நவநீதகண்ணன் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு நடத்தியது இதில் 11 மாவட்ட சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு கேட்கபட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தனர் இந்நிகழ்ச்சியில் திறமையான ஆசிரியர்களை வரவழைக்கப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு கோடைவிழாவின் பெயர் பொறித்த டீ சர்ட்கள் மற்றும் நிழல் தொப்பி வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்பதற்கு அணைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் கலந்துகொண்டனர் கொடைக்கானல் தெரசாள் பள்ளியை சேர்ந்த ஏ மேரிஅனஸ்தாசி ஜீ ஜோவிதா மற்றும் சியோன் பள்ளியைச் சேர்ந்த எஸ் மெர்லின் எம் வீணா ஆர் கீத்தா அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தாமரைசெல்வி மற்றும் நிகழ்ச்சிகளை ராஜமாணிக்கம் வில்லியம் தொகுத்து வழங்கினார்கள் இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *