சிதம்பரம் அருகே புவனகிரியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சிதம்பரம் அருகே புவனகிரியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற தனியார் பேருந்து, புவனகிரி திருவள்ளுவர் நகர் வளைவில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பில் மோதி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரின் கை துண்டானது. மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் அனுப்பு வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுனரின் அலட்சியமும், அதிவேகமும் தான் விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *