கடலூரில் இரு மீனவ கிராமங்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கடலூரில் இரு மீனவ கிராமங்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தேவனாம்பட்டினம்-சோனாங்குப்பம் ஆகிய இரு மீனவ கிராமங்களிடையே தடை செய்யப்பட்ட வலையான தட்டு வலை விரிப்பதில் நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த இரு கிராம மீனவர்களும் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் சோனங்குப்பத்தை சேர்ந்த பஞ்சநாதன் மற்றும் பாண்டியன் ஆகிய இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, தேவனாம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 500க்கு மேற்பட்டவர்கள் அரிவாள், இரும்பு கம்பி ஆகிய ஆயுதங்களுடன், கடற்கரை ஓரமாக சோனங்குப்பத்திற்கிடையே குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலிசார் குவிக்கப்பட்டனர். இதில் சோங்குப்பத்தை சேர்ந்த 3 பெண்களும் காயமடைந்தனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பஞ்சநாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரு கிராம மக்களிடையே மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *