கோவையில் கே.எப்.சி நிறுவனம் முற்றுகை

Comments (0) இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த கோரி, கோவையில் கே.எஃப்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழின படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த கோரி, மே மாதம் முழுவதும், போராட்ட மாதமாக தமிழர் விடியல் கட்சியினர் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை – அவிநாசி சாலையில் உள்ள அமெரிக்க நிறுவனமான கே.எப்.சி. கடையை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தின்போது, இனப்படுகொலையில் இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கும் பங்கு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *