எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலகுமாரனுக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது வழங்கியது இன்றும் பசுமையாய் நினைவில் இருப்பதாகவும் அவர் கலைமாமணி விருது, இலக்கிய சிந்தனை விருது என பல விருதுகளையும் தனது எழுத்துப் பணிக்காக பெற்ற பெருமைக்குரியவர் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பாலகுமாரன் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர் என்றும் அவரது மறைவு தமிழ் இலக்கியத்துறைக்கு பேரிழப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாலகுமாரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எழுத்துல நண்பர்களுக்கும் தனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *