புதுச்சேரி முதல்வரின் விமான பயணச் செலவு ரூ.66 லட்சம்

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கடந்த 16 மாதங்களில் 457 முறை விமான பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்காக 66 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அரசு பல்வேறு நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசிடம் நிதி பெறுவதற்காக அவ்வப்போது டெல்லி பயணம் மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் விமான பயணம் மேற்கொள்வது தொடர்பாக ரகுபதி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் விமான பயண செலவு விவரங்களை கேட்டு பெற்றுள்ளார்.அதில் கடந்த ஆகஸ்டு 2016ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2017 வரை விமான பயண செலவுகள் விவரம் பெறப்பட்டுள்ளன. இதில் முதலமைச்சரும் அமைச்சர்களும் 457 முறை விமானத்தில் பயணம் செய்துள்ளதாகவும், இதற்காக 66 புள்ளி 52 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் 163 முறை விமான பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *